Sunday, November 06, 2011

ஒரு மாலை  நேரம்...
ஒரு மாலை  நேரம்  ஜன்னல்  ஓரம் 
மழை  பொழிவதை    கண்டேன்.
இருண்ட  வானம், கருமேனி  மேகம், வெள்ளை மழை
பூமியில்  விழுந்து  நதியாகும்  மழைநீர்
மழையில்  குளித்து  புது  பொலிவுடன்   மர   இலைகள்  மற்றும்  பூக்கள்
நிழலை  தேடி  பாடி  பறக்கும்  பறவை  கூட்டம்
மேளம்   கொட்டும்  இடி
மசூதியில்  ஒலிக்கும்   திருக்குர்ஆன்    பாடல்
இதை  எல்லாம்   புகை  படம்  எடுக்கும் மின்னல்
சாரலை  பன்னீர்   போல  என்   முகத்தில்  தெளித்து
இந்த  கச்சேரிக்கு  என்னை  வரவேற்றது   குளிர்  காற்று.

சாரல்  என்  முகத்தில்  அடிக்க
குளிர்  காற்று  என்னை  அணைக்க
இந்த  பிரமாண்டம்  கண்டு  நான்   வியக்க
என்னுள்  இருக்கும்  ஏதோ  பாரம்  குறைய
என்னை  நான்   மறந்தேன்
இயற்கையில்  ஒன்ராக  கரைந்தேன் .


கரைந்த  என்னை  புத்துணர்வோடு   திரும்ப    செய்தாய்
என்  முக திரையை  அகற்ற  வைத்தாய்
என்னுள்  இருக்கும்   என்னை  விழிக்க  செய்தாய்
என்னை  உன்னிடம்   வணங்க  வைத்தாய் !

ஒரு சந்திப்பு

அவள்  யார் என்று அறியவில்லை
என் எதிரே நின்றால்
என்னை கண்டு  புன்னகை  சிந்தினால்
ஒன்றும்   புரியாமல்  ஊமை  ஆனேன்
அவள்  அழகு  விழிகள்
புன்னகையில்  விழுந்த  அவள் கன்ன குழிகள்
ஒன்றும்  புரியாமல்
புன்னகையுடன்  மௌனமாக  நின்றேன் .
அவள்  எதுவும்  பேசவில்லை
எனக்கு  பேச்சு  வரவில்லை
சில  கணம்  கழித்து  அவள்  திரும்பி  சென்றால்
கனவு  போல  இருந்தது
அனால்  கனவாகவில்லை !



An  Unexpected Encounter...
(a very causal one.. but unforgettable)


I knew her not
She came and stood before me and smiled
Caught unaware, was dumb for words.
Her expressive eyes
Dimples in her charming smile
Not knowing what to do
In silence, I stood for a while
With a smile.
She did not speak a word
And I was lost for words.
She left after some moments
It all went like a dream
But did not become one!


This page is powered by Blogger. Isn't yours?