Sunday, November 06, 2011

ஒரு மாலை  நேரம்...
ஒரு மாலை  நேரம்  ஜன்னல்  ஓரம் 
மழை  பொழிவதை    கண்டேன்.
இருண்ட  வானம், கருமேனி  மேகம், வெள்ளை மழை
பூமியில்  விழுந்து  நதியாகும்  மழைநீர்
மழையில்  குளித்து  புது  பொலிவுடன்   மர   இலைகள்  மற்றும்  பூக்கள்
நிழலை  தேடி  பாடி  பறக்கும்  பறவை  கூட்டம்
மேளம்   கொட்டும்  இடி
மசூதியில்  ஒலிக்கும்   திருக்குர்ஆன்    பாடல்
இதை  எல்லாம்   புகை  படம்  எடுக்கும் மின்னல்
சாரலை  பன்னீர்   போல  என்   முகத்தில்  தெளித்து
இந்த  கச்சேரிக்கு  என்னை  வரவேற்றது   குளிர்  காற்று.

சாரல்  என்  முகத்தில்  அடிக்க
குளிர்  காற்று  என்னை  அணைக்க
இந்த  பிரமாண்டம்  கண்டு  நான்   வியக்க
என்னுள்  இருக்கும்  ஏதோ  பாரம்  குறைய
என்னை  நான்   மறந்தேன்
இயற்கையில்  ஒன்ராக  கரைந்தேன் .


கரைந்த  என்னை  புத்துணர்வோடு   திரும்ப    செய்தாய்
என்  முக திரையை  அகற்ற  வைத்தாய்
என்னுள்  இருக்கும்   என்னை  விழிக்க  செய்தாய்
என்னை  உன்னிடம்   வணங்க  வைத்தாய் !

Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?